சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.எல்.ஏ. நன்றி அறிவிப்பு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 07th June 2016 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா, திங்கள்கிழமை வன்னியம்பட்டி, இனாம்கரிசல்குளம், வைத்திலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, குறைகளைக் கேட்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.

    இம் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு அந்தத்த துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

     அதிமுக நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா ஆகியோர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai