சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மீண்டும் பழைய பாதைகளிலேயே போக்குவரத்து

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 07th June 2016 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய பாதைகளிலேயே போக்குவரத்து திங்கள்கிழமை மாலை தொடங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பென்னிங்டன் மார்கெட்டை ஒட்டியுள்ள சாத்தூர் சாலை ஒரு வழிப் பாதையாக இருந்து வந்தது. மதுரை, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியே வந்து சாத்தூர் சாலை வழியே பேருந்து நிலையத்திற்கு செல்லும். இதனால் போக்குவரத்து சீராக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் சாத்தூர் சாலை வழியே பேருந்துகள் வருவதற்கும் போவதற்கும் அனுமதிக்கப்பட்டது. இதனால் நெரிசல் அதிகரித்து போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஆட்சியர் விசாரணை நடத்தி மீண்டும் பழைய பாதையிலேயே பேருந்துகள் சென்று வர நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் திங்கள்கிழமை மாலை முதல் பழைய பாதைகளிலேயே போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் நிம்மதியடைந்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai