Enable Javscript for better performance
அருப்புக்கோட்டையில் திருட்டு: 2 பேர் கைது; 40 பவுன் நகை மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் திருட்டு: 2 பேர் கைது; 40 பவுன் நகை மீட்பு

    By அருப்புக்கோட்டை  |   Published on : 08th June 2016 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடர்பாக இருவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

      அருப்புக்கோட்டை பகுதிகளில் அடிக்கடி வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நகர் காவல் குற்றவியல் பிரிவு ஆய்வாளர் சம்பத்,காரியாபட்டி காவல் துணை ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரின் தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும்பணி தீவிரபடுத்தப்பட்டது. இந்நிலையில் அருப்புக்கோட்டை நகரின் நெசவாளர் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப்பின முரணாகப் பதிலளித்தனராம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கமுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் சுரேஷ்பாபு(27), முருகன் மகன் கார்த்தி (18) ஆகியோர் எனத் தெரிய வந்தது. இந்த இருவரும் அருப்புக்கோட்டை, கமுதி, சாயல்குடி,முதுகுளத்தூர், பேரையூர்,பெருநாழி,பரமக்குடி மற்றும் ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் 110 பவுன் நகைகளைக் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மீதம் 70 பவுன் நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai