சுடச்சுட

    

    சிவகாசி அருகே திங்கள்கிழமை கார் மோதி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்தார்.

     சிவகாசி- சாத்தூர் சாலையில் உள்ள அனுப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (63). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர், திங்கள்கிழமை சிவகாசி- சாத்தூர் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, ரத்தினபுரி பேருந்து நிறுத்தம் அருகே,சிவகாசியிலிருந்து சாத்தூர் சென்ற கார் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

     இது குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் அவரது மனைவி கங்காதேவி அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டிச் சென்ற சிவகாசி ரிசர்வ் லைன் பாரதிநகர் கணேசன் மகன் வெங்கடேஷ்வர யுவராஜூவை (25) போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai