சுடச்சுட

  

  சிவகாசியில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்குகிறது என வட்டாட்சியர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

     இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி வட்டத்தில் ஜூன் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது. தொடக்க நாளான புதன்கிழமை (ஜூன் 8) சிவகாசி உள்வடத்தில் உள்ள விஸ்வநத்தம், சிவகாசி, ஆனையூர், மாரனேரி, வேண்டுராயபுரம், எம்.துரைச்சாமிபுரம், நாரணாபுரம், வி.சொக்கலிங்கா புரம், கொங்கலாபுரம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும். இதற்கு சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமை வகிக்கிறார்.

     ஜூன் 9ஆம் தேதி சல்வார்பட்டி உள்வட்டம் சுப்பிரமணியபுரம், பேர்நாயக்கன்பட்டி, தாயில்பட்டி, வெற்றிலையூரணி, அனுப்பன்குளம், சல்வார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 10 ஆம் தேதி மங்களம் உள்வட்டம் காளையார் குறிச்சி, பூரணசந்திரபுரம், நெடுங்குளம், எரிச்சநத்தம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், ஜூன் 14 ஆம் தேதி மங்களம் உள்வட்டம் மங்களம், நமஸ்கரித்தான்பட்டி, செவலூர், புதுக்கோட்டை, ஈஞ்சார், கிருஷ்ணபேரி, வடபட்டி, சச்சக்குடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், ஜூன் 15 ஆம் தேதி திருத்தங்கல் உள்வட்டம் திருத்தங்கல்,கீழதிருத்தங்கல், ஆணைக்குட்டம், அ.மீனாட்சிபுரம், வெள்ளூர், மேல ஆமத்தூர், கவுண்டம்பட்டி, காரிசேரி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும்.

    இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம். இதற்கான ஏற்பாட்டினை மண்டல துணை வட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்ட வருவாய் துறையினர் செய்து வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai