சுடச்சுட

  

  சிவகாசி, திருத்தங்கலில் பள்ளி செல்லா குழந்தைகள் 10 பேர் மீட்பு

  By சிவகாசி  |   Published on : 08th June 2016 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி, திருத்தங்கலில் பள்ளி செல்ல குழந்தைகள் 10 பேர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

   விருதுநகர் தொழிலாளர் ஆய்வாளர் ராமராஜ் தலைமையில், மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி, தொழிலாளர் துணை ஆய்வாளர் காயத்ரி, சிவகாசி முதல் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் சி.ராதா, 2ஆம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் க.கிருஷ்ணமூர்த்தி கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் உள்ள கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

   இதில் 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடையில் நின்றவர்கள் 10 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களை அதிகாரிகள் அங்கிருந்து மீட்டு, தேசிய குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai