Enable Javscript for better performance
சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் தர்னா

    By விருதுநகர்  |   Published on : 08th June 2016 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வையம்பட்டி சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

      விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள வையம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு புகழ் பெற்ற அம்மன் கோயில் உள்ளதால் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

      இதனால் மதுரையிலிருந்து வையம்பட்டிக்கு தினமும் 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காரியாபட்டியிலிருந்து வையம்பட்டிக்கு பாம்பாட்டி, பாஞ்சார் ஆகிய கிராமங்களை கடந்து தான் செல்ல வேண்டும். இச்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

      இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வையம்பட்டி கிராம மக்கள் கோரிக்கையை அடுத்து பாம்பாட்டி வரை சாலை சீரமைக்கப்பட்டது.

      மீதமுள்ள 3 கி.மீ. தூரமுள்ள வையம்பட்டி சாலையை சீரமைக்க வில்லை. இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை.

      இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வையம்பட்டி சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காரியாபட்டி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai