சுடச்சுட

    

    தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம்: வசூலிப்பதை கண்டித்து ஜூன் 15இல் போராட்டம்: மாணவர் சங்கம் முடிவு

    By விருதுநகர்  |   Published on : 08th June 2016 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஜூன் 15 ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

     விருதுநகரில், இந்திய மாணவர் சங்க மாநிலக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாநிலச் செயலர் உச்சிமாகாளி, மத்தியக்குழு உறுப்பினர் கண்ணன், மாநில துணைத் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     இதில், தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த, புதிய கட்டண நிர்ணயக் குழுவை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் 10 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதை கைவிட வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 15 ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai