Enable Javscript for better performance
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

     முகாமுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் ஆதிமூலம் வரவேற்றார். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.எஸ்.பொன்னுத்தாய் சிறப்புரையாற்றினார்.

     வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவர் கருணாகரபிரபு புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் 1066 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் சுமதிசமுத்திரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai