சுடச்சுட

    

    பெண் காவலரை, செல்லிடப்பேசியில் படம் பிடித்த ஆண் காவலர் கைது

    By விருதுநகர்  |   Published on : 08th June 2016 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் அரசு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் காவலரை செல்லிடப் பேசியில் படம் எடுத்த ஆண் காவலர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

     காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக நிர்வாகி குருமூர்த்தி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவத்தில் காயமடைந்து, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில், விருதுநகர் ஆயுதப்படையில் பணி புரியும் உதயகுமார், ரமாபிரபா, அபிநயா உள்ளிட்ட 4 போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தனர். திங்கள்கிழமை இரவு அங்குள்ள உடை மாற்றும் அறையில் பெண் போலீஸார் இருவரும் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு மது போதையில் வந்த உதயகுமார், அந்த பெண் போலீஸாரில் ஒருவரது செல்லிடப்பேசியை எடுத்து அவர்களை படம் பிடித்தாராம். இதைப் பார்த்த பெண் காவலர் ரமாபிரபா சத்தம் போட்டாராம்.

     இதையடுத்து, ரமாபிரபா, விருதுநகர் கிழக்கு போலீஸில் புகார் செய்தார். விருதுநகர் (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி அறிவுறுத்தலின் பேரில் ஆயுதப்படை காவலர் உதயக்குமார், தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் உதயக்குமாரை, காவல் ஆய்வாளர் தெய்வீகபாண்டியன் செவ்வாய்க்கிழமை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai