சுடச்சுட

    

    மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 08th June 2016 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையம் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு.வி.க. தொடக்கப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தலைமையில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

    பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர், மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்றனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

     இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai