சுடச்சுட

  

  ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜூன் 16-க்கு தள்ளிவைப்பு

  By ராஜபாளையம்  |   Published on : 09th June 2016 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்திரப்பட்டி நெசவாளருக்கான புதிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜூன் 16க்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய பேச்சுவார்த்தைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக போவதாக தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

  சத்திரப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பேண்டேஜ் துணி உற்பத்தி தொழிலில் பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட சிறுவிசைத்தறி கூடங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், மறைமுகமாக 2 ஆயிரம் பேரும் பணியில் உள்ளனர். 3 ஆண்டுக்கு ஒரு முறை ஏற்றுமதியாளர்கள், பேண்டேஜ் உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுவது வழக்கம்.

  கடந்த 2013ல், போடப்பட்ட ஒப்பந்தம் ஏப்ரலில் முடிந்தது. பின்னர் கூலி உயர்வு பேச்சுவார்த்தை மே 18-இல் விருதுநகர் தொழிலாளர் துறை அலுவலகத்திலும், மே 25-இல் ராஜபாளையத்திலும் நடந்தன. இவற்றில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 3ம் கட்ட பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டக்குழு மகாசபை கூட்டம் புதன்கிழமை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் தலைமையில் நடந்தது. ஜூன் 16-இல் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கப்போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai