Enable Javscript for better performance
ஊராட்சிப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு முடித்தவர்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சிப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு முடித்தவர்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க மறுப்பு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 09th June 2016 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியரை 9-ம் வகுப்பில் சேர்க்க அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சேதுநாராயணபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்குசுமார் 150 பேர் படித்து வருன்கினறர். இங்கு 8-ஆம் வகுப்பு முடித்த 12 மாணவிகள், வத்திராயிருப்பு இந்து பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு சேருவதற்காக சென்றுள்ளார்கள். அங்கு இவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி 4 மாணவிகளை மட்டும் சேர்த்துள்ளனர். மற்றவர்களைச் சேர்க்க மறுத்துவிட்டனராம். இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர் புதன்கிழமை கூறியதாவது: ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் படித்துச் சென்றால் மேல் வகுப்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க மாட்டார்கள் என்ற நிலையை உருவாக்க இதுபோன்ற பள்ளிகள் முயற்சிக்கின்றன.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்துச் செல்லும் மாணவ மாணவியரை 6-ஆம் வகுப்பில் சேர்க்க அரசு உதவி பெறும் பள்ளிகள் மறுக்கின்றன.

    இதே நிர்வாகம் நடத்தும் பள்ளியிலேயே முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்த்தால்தான் 6-ஆம் வகுப்பும் இங்கேயே தொடர்ந்து படிக்க இயலும் என்ற மனநிலையை பெற்றோரிடம் உருவாக்குவதற்காக இதுபோல் செய்கின்றனர். இதனால், பெற்றோர்கள் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க தயங்குகிறார்கள் என்றனர்.

    இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தியிடம் கேட்போது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். வத்திராயிருப்பு இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளைச் சேர்த்துக் கொள்ள தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai