சுடச்சுட

    

    கத்தார் நாட்டு சிறையில் உள்ள கணவரை மீட்டுத் தர கோரி ஆட்சியரிடம் மனு

    By விருதுநகர்  |   Published on : 09th June 2016 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கணவரை மீட்டுத் தர கோரி அவரது மனைவி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் புதன்கிழமை மனு அளித்தார்.

    விருதுநகர் மாவட்டம் டி. சேடபட்டி அருகேயுள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை(47). 5 ஆண்டுகளுக்கு மதுரை மேலூரை சேர்ந்த முகவர் ஒருவர் கத்தார் நாட்டுக்கு கொத்தனார் வேலைக்கு இவரை அனுப்பி வைத்தார். அங்கு பணிக்கு சென்ற மூன்று மாதத்தில் இவருடன் தங்கியிருந்த நண்பர் ஒருவர், பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் அங்குள்ள போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனராம்.

    இந்த வழக்கில் கத்தார் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியதாம். அதில், செல்லத்துரைக்கு மரண தண்டனை விதித்ததாக தெரிகிறது. இது குறித்த தகவலை அவரது மனைவி ராஜம்மாளுக்கு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து ராஜம்மாள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், நான் இரண்டு குழந்தைகளுடன் கிராமத்தில் கஷ்டப்படுகிறேன். கத்தார் சிறையில் மரண தண்டனைக் கைதியாக உள்ள எனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai