சுடச்சுட

    

    களத்தொகுதி வழி நடத்துநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

    By விருதுநகர்  |   Published on : 09th June 2016 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் தாற்காலிக களத்தொகுதி வழி நடத்துநர் பதவிகளுக்கு தகுதியானவர்கள், ஜூன் 10 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

     அவரது செய்தி குறிப்பு: இப்பணிக்கு குறைந்தபட்சமாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு, கணினி இயக்கம், இருசக்கர வாகன உரிமம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். 21 வயது முதல் 40 வயதிற்குள்ளும், செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்ப தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04562- 252036 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai