சுடச்சுட

  

  சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கோயில் நிர்வாகியை தாக்கிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  சிவகாசி அருகே கட்டளைப்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவை அதே ஊரைச் சேர்ந்த பொன்ராஜ்(55) பொறுப்பேற்று நடத்தினாராம். இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த பொன்னுப்பாண்டி(27), சுப்புராஜ்(21), மணிவண்ணன்(20), தனசேகர்(23), தினேஷ்(24) ஆகிய 5 பேரும் தகராறு செய்து தாக்கினராம். காயமடைந்த பொன்ராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai