Enable Javscript for better performance
துப்பரவுப்பணியை மேம்படுத்த வேண்டும்: சிவகாசி நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    துப்பரவுப்பணியை மேம்படுத்த வேண்டும்: சிவகாசி நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

    By சிவகாசி  |   Published on : 09th June 2016 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி நகராட்சிப் பகுதிகளில் துப்பரவுப்பணியை மேம்படுத்த வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    சிவகாசி நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. தலைவர் வெ.க.கதிரவன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

    உறுப்பினர் பாலகுரு: நகராட்சியில் சுகாதாரப் பணிகள் தொய்வு அடைந்துள்ளன.

    பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. தொட்டிக்கு வெளியே குப்பைகள் சிதறி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே துப்பரவுப்பணியை விரைவு படுத்த வேண்டும் என்றார்.

    இதை கருத்தை உறுப்பினர் சிவானந்தம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

    முனீஸ்வரன்: எனது வார்டில் ஒப்பந்தம் விடப்பட்ட பணிகள் நடைபெறவில்லை. ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால், ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட பணிக்கு நகராட்சி பணம் வழங்கவில்லை. எனவே புதிய பணியை தொடங்க இயலாத நிலையில் உள்ளோம் என்கிறார்கள்.

    பொறியாளர் ரவீந்திரன்: ஒப்பந்ததாரக்களுக்கு ரூ.1 கோடி வரை பாக்கி உள்ளது.

    மாநில நிதிக் குழு மானியம் ரூ.2 கோடி வர வேண்டியுள்ளது. அந்தப் பணம் வந்ததும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும்.

    நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் பேசியதாவது: நகராட்சியில் உள்ள எந்த அதிகாரியும் நான் சொல்வதை கேட்பதில்லை. இதனால் நகரில் பல இடங்களில் குப்பை சரிவர அள்ளப்படுவதில்லை.

    நானே இனி களத்தில் இறங்கி குப்பைகள் அகற்ற முடிவு செய்துள்ளேன். இதற்கு மன்ற உறுப்பினர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்.

    நகராட்சி அண்ணாவி தோட்டம் உயர்நிலைப் பள்ளியில் பேவர் கல் பதிக்க ரூ.9.90 லட்சம், நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும்  சிறுமின்விசை பம்புகளை பழுதுபார்க்க ஆண்டுக்கு ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai