Enable Javscript for better performance
பண மோசடி: தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் பணத்தை மோசடி செய்து விட்டதாக தனியார் நிறுவன ஊழியர் மீது செவ்வாய்க்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

      சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த  பெருமாள் மகன் செல்வராஜ்(36). சிவகாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இவர் 1.7.2014 முதல் 12 மாதம் தலா ரூ.4500 வீதம் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ரேடியல் பெர்ணாண்டோவிடம் பணத்தைக் கொடுத்து, செலுத்தச் சொல்லியுள்ளார். இந்நிலையில் அந்தப்பணத்தை செல்வராஜ், ரேடியல் பெர்ணாண்டோவிடம் கேட்டபோது, நீங்கள் பணம் கட்டிய நிறுவனம் மூடப்பட்டு விட்டது எனக் கூறிவிட்டாராம்.

    தனது பணம் ரூ.54 ஆயிரத்தை தனியார் நிறுவனமும், அதில் பணிபுரிந்த பெர்ணாடோவும் மோசடி செய்துவிட்டதாக செல்வராஜ் சிவகாசி நகர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai