சுடச்சுட

    

    மனைவிக்கு துன்புறுத்தல்: முதல்நிலை காவலர் மீது வழக்கு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 09th June 2016 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் ஆதித்தன். இவர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா (36). ஆதித்தன் தனது மகளையும் ஹேமலதாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றி, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.

    இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஹேமலதா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார், ஆதித்தன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai