சுடச்சுட

  

  ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது பலாப் பழங்கள் அதிகளவில் காய்த்து குலுங்குகின்றன.

  ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு, தேவதானம் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மா, தென்னை, சப்போட்டா, எலுமிச்சையும் குறைந்த அளவில் பலா மரங்களும் உள்ளன. கேரள பலாப்பழங்களுக்கு அடுத்து குற்றாலம், ராஜபாளையம் உள்ளிட்ட நெல்லை, விருதுநகர் மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் காய்க்கும் பலாக்களுக்கு தனி ருசி உண்டு.  தற்போது முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு பகுதிகளில் பலா காய்க்க துவங்கி உள்ளன. இந்த ஆண்டு மா சாகுபடி குறைந்துள்ள நிலையில் ஓரளவு பலா காய்த்துள்ளது. உள்ளூர் பகுதி கடைகளில் ஒரு பழம் ரூ. 80முதல் 150 வரை விற்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai