சுடச்சுட

  

  வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி பணம் மோசடி

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 09th June 2016 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஏடிஎம் ரகசிய எண்ணைப் பெற்று ரூ.22, 500 மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பானாங்குளத்தைச் சேர்ந்த குருவையா மனைவி பால்பாக்கியம் (45). இவரது மகன் பூமுடிராஜா மாற்றுத் திறனாளி ஆவார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் இவருக்கு மாதந்திர உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.22500 இருந்துள்ளது.

  இந்நிலையில் திங்கள்கிழமை பால்பாக்கியத்தின் செல்லிடப்பேசிக்கு ஒரு பெண், வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி வங்கிக் கணக்கு எண் மற்றும் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணைக் கேட்டுள்ளார். பால்பாக்கியம் அதனைக் கூறியுள்ளார்.

  பின்னர் வங்கிக்குச் சென்று விசாரித்துள்ளார். அங்கு, உங்களது சேமிப்பு கணக்கிலிருந்து ரூ.22, 500 எடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள்.

   இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பால்பாக்கியம் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் பி.அசோகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai