சுடச்சுட

  

  விருதுநகர் அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரேக்கு கட்டணம்: நோயாளிகள் அதிருப்தி

  By விருதுநகர்  |   Published on : 09th June 2016 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரேக்கு நோயாளிகளிடம் பண வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் சாதாரண எக்ஸ்ரே கருவிகள் மட்டுமே இருந்தன. உள் நோயாளிகளுக்கு இலவசமாகவும், வெளி நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயும் நோயாளிகளிடம் வழங்கப்பட்டு வந்தது.

  இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன், மருத்துவர் அறையில் உள்ள கணினிகள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, படம் எடுத்த சில விநாடிகளில், நோயின் தன்மை குறித்து மருத்துவர்கள் தங்களது அறைகளில் இருந்தவாறே அறிந்து கொள்ள முடியும்.

  ஆனால், இந்த எக்ஸ்ரேயை வழங்க நோயாளிகளிடம் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியது: டிஜிட்டல் எக்ஸ்ரே எடுக்கும் அறையிலிருந்து, மருத்துவர்கள் இருக்கும் இடத்தில் உள்ள கணினிக்கு  இணைப்பு கொடுப்பதில் பிரச்னை உள்ளது. அந்த இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால், வேறு வழியின்றி எக்ஸ்ரே எடுக்கப்பட்ட படத்தை நோயாளிகள் வாங்கி செல்ல வேண்டியுள்ளது. அதற்காக கட்டணம் வசூல் செய்கிறோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai