சுடச்சுட

  

  விருதுநகர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி

  By விருதுநகர்  |   Published on : 09th June 2016 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் தாற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக ஆணையாளர் ( பொறுப்பு ) மோகன் தெரிவித்தார்.

  அவர் கூறியது: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக குடம், பாத்திரம் மற்றும் சிரட்டை, டயர் போன்றவற்றில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதில் உருவாகும் டெங்கு கொசுக்கள் ஆபத்தை ஏற்படுத்த கூடியது. ஆகவே, டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்க கொசு ஒழிப்பு தாற்காலிக பணியாளர்கள் 37 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் தினமும் 4 வார்டுகள் வீதம் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல் மற்றும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வர். மேலும், பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயமும் வழங்கி வருகின்றனர். அவர்களை வீட்டுக்குள் அனுமதித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

  தண்ணீர் தேங்கும் தொட்டிகள், குடங்கள், வாளிகள் இவற்றை மூடி வைக்க வேண்டும். இளநீர் மட்டைகள், உரல்கள், பிளாஸ்டிக் கப்புகள் இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். தாங்களாகவே, மாத்திரை அல்லது மருந்து சாப்பிடக் கூடாது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai