சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 22 பள்ளிகள் பட்டியல் அறிவிப்பு

  By விருதுநகர்  |   Published on : 09th June 2016 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் செயல்படும் 22 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

  அவர் கூறியதாவது: சாத்தூர் வெங்கடாசலபுரம் கம்மவார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்தேவன்பட்டி மிலிட்டரிமேன் மழலையர் மற்றும் தொடக்கபள்ளி, விருதுநகர் ஆத்துமேடு மாரியம்மன் மழலையர் பள்ளி, வெம்பக்கோட்டை செவல்பட்டி கலைவாணி மழலையர் பள்ளி, வெம்பக்கோட்டை சுண்டங்குளம் குட்ஷெப்பர்டு மழலையர் பள்ளி, அருப்புக்கோட்டை எம். ரெட்டியபட்டி ரோஜா மழலையர் பள்ளி, திருச்சுழி பத்ரகாளியம்மன் மழலையர் பள்ளி, திருச்சுழி கருவக்குடி மகாத்மா மழலையர் பள்ளி, அருப்புக்கோட்டை சின்னவள்ளிக்குளம் காமராஜ் மழலையர் பள்ளி, அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் சாலை கிரீன் விஸ்டம் பள்ளி, அருப்புக்கோட்டை செம்பட்டி ஜி.கே. இண்டர்நேஷனல் பள்ளி, மல்லாங்கிணறு பொன் பழனி மழலையர் பள்ளி, ராஜபாளையம் லயன்ஸ் மழலையர் பள்ளி, சேத்தூர் மேட்டுப்பட்டி விக்டரி மழலையர் பள்ளி, ராஜபாளையம் அல்ஹதா மழலையர் பள்ளி, சமந்தாபுரம் நவ்ரா பள்ளி, முகவூர் மீனாட்சிபுரம் கிரேஸ் மழலையர் பள்ளி, ஆசிலாபுரம் ஸ்ரீராகவேந்திரா வித்யாமந்திர் மழலையர் பள்ளி, ராஜபாளையம் ரயில்வே பீடர் சாலை நாடார் பள்ளி, சிவகாசி விளாம்பட்டி ஆற்றலரசு கே. ஆறுமுகசாமி நாடார் பள்ளி, சிவகாசி லிங்காபுரம் காலனி கேவிடிஎஸ் பள்ளி, வத்திராயிருப்பு அக்கனாபுரம் ஸ்ரீவிவேகானந்தா வித்யாமந்திர் பள்ளி என மொத்தம் 22 பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெறவில்லை.

    இந்தப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai