Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி-சாத்தூர் சாலையில் உள்ள பாரைப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகக்கனி(59). இவர் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 20-ஆம் தேதி தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஜூன் 6 ஆம் தேதி பாரைப்பட்டி வந்தாராம்.

    அப்போது வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது, மாடி வழியே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 10 பவுன் நகையைத் திருடி உள்ளது தெரியவந்தது.

     இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai