Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜமாபந்தி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட ஆட்சியர் வெ.ராஜாராமன் தலைமையில் புதன்கிழமை ஜமாபந்தி (கிராம வருவாய் தீர்வாயம்) நடைபெற்றது. இதில் வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், குரக்குளம், சிங்கம்மாள்புரம், பொன்னாங்கன்னி, தெய்வேந்திரி, தைலாகுளம், ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளம், செங்குளம் ஆகிய கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்களிடம் ஆட்சியர் மனுக்களைப் பெற்றார். இதில் 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஜமாபந்தி வரும் 15-ஆம் தேதி வரை சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளைத் தவிர மற்ற நாள்களில் நடைபெறும். ஜமாபந்தி நடைபெறும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நிலப்பதிவு, பட்டா மாறுதல், நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான மனுக்களை ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai