சுடச்சுட

  

  அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

  By சாத்தூர்  |   Published on : 10th June 2016 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தூர் அரசு மருத்துவமனையில் சட்டபேரவை உறுப்பினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.

  சாத்தூரில் பிரதான சாலை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி என இரண்டு இடங்களில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரதான சாலையில் செயல்படும் மருத்துவமனையில் பச்சிளம்குழந்தை, பிரசவ வார்டு, எக்ஸ்ரே, ரத்த வங்கி,பிரேத பரிசோதனை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

  வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள புதிய மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், சித்தமருத்துவம் உள்ளிட்டவைகள் செயல்படுகின்றன.

  இந்த அரசு மருத்துவமனைகளில், சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

  இந்த மருத்துவமனைகளில் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

   நோயாளிகளிடமும், மருத்துவர்களிடமும் மருத்துவமனைகளின் குறைகளைக் கேட்டறிந்தார். ஆய்வின் போது ஊராட்சி ஒன்றியத் தலைவர் வேலாயுதம், அதிமுக தொகுதி இணைச்செயலாளர் முனீஸ்வரன், நகரச் செயலர் வாசன், ஒன்றியச் செயலர் சண்முகக்கனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai