சுடச்சுட

    

    இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் சாவு

    By அருப்புக்கோட்டை  |   Published on : 10th June 2016 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை மணிநகரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ்(72). இவர் வியாழக்கிழமை காலை அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளி முன்பு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அருப்புக்கோட்டையை நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, சுந்தர்ராஜின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்ட சுந்தர்ராஜ், அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய காரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai