இரு சக்கர வாகன விபத்து: தலைமை ஆசிரியைகள் காயம்
By ஸ்ரீவில்லிபுத்தூர் | Published on : 10th June 2016 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு தலைமை ஆசிரியைகள், மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மடாவர்வளாகம், தெற்கு ரத வீதியில் குடியிருக்கும் ரவி மனைவி வசந்தகுமாரி(44). இவர் கங்காகுளம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். புதன்கிழமை பள்ளி முடிந்து அருகேயுள்ள துலுக்கன்குளம் இந்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பிரேமலதாவை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு, ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார்.
வன்னியம்பட்டி விலக்கை அடுத்து வரும்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வசந்தகுமாரி வண்டி மீது மோதியது. இதில் வசந்தகுமாரி, பிரேமலதா இருவரும் பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வடக்கு கரிசல்குளம் ச.சித்திரபுத்திரனும்(24) காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வசந்தகுமாரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சித்திரபுத்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.