Enable Javscript for better performance
கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியவர் கைது

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 10th June 2016 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

       ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நாச்சியார்பட்டியைச் சேர்ந்த அய்யாபட்டு சீனிவாசன் (50) என்பவர் பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளிக்க வந்துள்ளார். அங்கிருந்தவர்கள் பிள்ளையார்குளம் கிராமத்திற்கு நாளை தான் மனு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அப்போது அய்யாபட்டு சீனிவாசன் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசி வட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.    பிள்ளையர்குளம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் அவரை சமாதானம் செய்துள்ளார். இதில் ஆத்திரமுற்ற அவர், ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனைக் கைது செய்தனர். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai