Enable Javscript for better performance
குவைத்தில் பணி புரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    குவைத்தில் பணி புரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

    By விருதுநகர்  |   Published on : 10th June 2016 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய தொலைத் தொடர்புத்துறையின், குவைத் திட்ட பணிகளில் பணி புரிய  வேலைவாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      செய்திக்குறிப்பு விவரம்:  இந்திய தொலைத் தொடர்புத்துறையின், குவைத் திட்ட பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். பி.இ., பி.டெக் எலெக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன், சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மாத ஊதியம் ரூ.56 ஆயிரம், டிப்ளமோ சிவில் மேற்பார்வையாளர்கள் மாத ஊதியம் ரூ.30,200 வழங்கப்படும்.

       22 வயது முதல் 50 வயதிற்குட்பட்டு பிளஸ் 2 தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பைபர் சிறப்புத் தகுதி உள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 26,800, சிவில் ஆட்டோகேட் ஆபரேட்டர்களுக்கு ரூ.24,500, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டி அனுபவம் பெற்ற குவைத் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களுக்கு மாத ஊதியம் ரூ.19 ஆயிரம், இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.16,750, 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொலைத் தொடர்புத்துறையில் அனுபவம் பெற்ற தொழிலாளர்களுக்க ரூ. 15,600 வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.c‌o‌m என்ற வலைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி, விமான டிக்கெட், இருப்பிடம், உணவுப்படி, மருத்துவம், மருத்துவ காப்பீடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 044-22505886  22502267  22500417 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai