Enable Javscript for better performance
கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 10th June 2016 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மம்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் மகன் திராவிடலிங்கம் (42). இவரிடம் இதே இடத்தைச் சேர்ந்த மணிகண்டன் 2015 மே மாதம் ரூ.15 ஆயிரம் வாங்கினாராம். புதன்கிழமை இரவு கோயில் அருகே இருந்த மணிகண்டனிடம் திராவிடலிங்கம் பணத்தைக் கேட்டுள்ளார்.

      அப்போது தான் வைத்திருந்த அரிவாளால் திராவிடலிங்கத்தை மணிகண்டன் வெட்டியுள்ளார். பலத்த காயமுற்ற திராவிடலிங்கம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகாரின்பேரில் மம்சாபுரம் போலீஸார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai