சுடச்சுட

  

  சாத்தூரில் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஒன்றியக் குழுத் தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். ஆணையர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.

  6-ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற விவாதங்கள்:

  பெத்துரெட்டியார்: ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து மருத்துவத்துறைக்கு மட்டும் நிதி ஒதுக்கபட்டு வருகிறது. பொது வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தலைவர்: நென்மேனி-வன்னிமடை சாலையில் உள்ள உடைந்த பாலம் உள்பட அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.

      உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதால், அதிகாரிகளும், உறுப்பினர்களும் பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டு நிறைவேற்ற வேண்டும் என்றார்.   கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai