சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்
By விருதுநகர் | Published on : 10th June 2016 12:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
டீசல், பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி விருதுநகரில் சிஐடியு சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் 19 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியுள்ளது. இதனால் ஆட்டோ மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா, மாவட்டக் குழு உறுப்பினர் நேரு ஆகியோர் தலைமையில் விருதுநகரில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.