சுடச்சுட

  

  சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பேர் சாவு

  By சிவகாசி  |   Published on : 10th June 2016 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இரண்டு அறைகள் தரைமட்டமாகின.

  சிவகாசி அருகே பூலாஊரணியில், சன்னாசிபட்டி கிருஷ்ணசாமி கோனார் மகன் ராஜூ(55)வுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் அறைகள் 80 உள்ளன. 100 பெண்கள் உள்பட 250 தொழிலாளர்கள் பணிபுரிகிந்றனர்.

  இவர்களில் பெரும்பாலானோர் அய்யம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இக்கிராம கோயில்களில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இதனால், வியாழக்கிழமை 80 பேர் மட்டுமே வேலைக்கு வந்துள்ளனர். அதிலும் பலர் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள்.

  வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில், பேன்சிரக பட்டாசிற்கு மருந்து செலுத்தும் பணியில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி(40), சித்துராஜபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமி(52) ஆகிய இரு தினக்கூலி தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது உராய்தல் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டு மருந்து செலுத்தும் அறைகள் இரண்டு தரைமட்டமாகின.

  இதில் பணியில் ஈடுபட்டிருந்த சுந்தரமூர்த்தி, அழகர்சாமி இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

  சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், காவல் துணை கண்காணிப்பாளர்(பொறுப்பு) சுபகுமார், வட்டாட்சியர் பாஸ்கரன், தீப்பெட்டி-பட்டாசு தனி வட்டாட்சியர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

  இந்த விபத்து குறித்து மாரனேரி போலீஸார் ஆலை போர்மேன் சிவகாசி ரிசர்வ்லைன் சிலோன் காலனியைச் சேர்ந்த ஆனந்தகுமாரை(25)க் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai