சுடச்சுட

  

  அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(53). புதன்கிழமை இரவு தான் தங்கியிருந்த அறைக்குள் சென்றவர் வியாழக்கிழமை பிற்பகல் வரை வெளியே வரவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கோவிந்தராஜின் மகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர் வந்து ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கோவிந்தராஜ் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த பந்தல்குடி காவல்துறையினர் கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்னை காரணமாக கோவிந்தராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai