சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டங்கள் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

    அவரது அறிக்கை: பொது விநியோக திட்ட வட்டார அளவிலான குறைதீர்கூட்டம் சனிக்கிழமை நடத்தப்படுகிறது. ராஜபாளையம் வட்டம் இனாம் செட்டிகுளம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் தைலாகுளம், சிவகாசி வட்டம் தேவர்குளம், சாத்தூர் வட்டம் நடுவப்பட்டி,  விருதுநகர் வட்டம் சின்னப்பரெட்டியபட்டி, அருப்புக்கோட்டை வட்டம் கள்ளக்காரி, காரியாபட்டி வட்டம் தண்டியனேந்தல், திருச்சுழி வட்டம் கட்டனூர், வெம்பக்கோட்டை வட்டம் விஜயரெங்கபுரம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குறைதீர் கூட்டம் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறும். பொதுமக்கள் கலந்து கொண்டு பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.

     மேலும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் ஆகிய மனுக்களை வழங்கியும் தீர்வு காணலாம். மேலும், பொது விநியோக திட்டம் தொடர்பான குறைகளை 9445000927, 9445000353 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். வாட்ஸ் அப் மூலம் 9498188701 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai