சுடச்சுட

  

  பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனை

  By ராஜபாளையம்  |   Published on : 10th June 2016 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம், சத்திரப்பட்டி, தளவாய்புரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

  ராஜபாளையம் பகுதியில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் எதிரே கழிவுநீர் வாய்க்கால் பகுதியையொட்டி சுகாதாரமற்ற எண்ணையில் பொறித்த தின்பண்டங்கள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஈ, கொசு, விஷ பூச்சிகள் இதன் மீது உட்கார்கின்றன. சில கடைகளில் காலாவதி மிட்டாய், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

  இதுபோன்ற உணவுகளை உண்பதால் மாணவர்கள் வாந்தி, வயிற்று போக்கு, மயக்கம் உள்ளிட்ட பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

  உள்ளாட்சி அமைப்பின் சுகாதார அலுவலர்களோ, ஆய்வாளர்களோ இவற்றைக் கண்டு கொள்வது இல்லை.

  இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சுகாதாரமற்ற உணவுகளில் ரத்த அணுக்களை சுருக்கும் புழுக்கள் உள்ளன. இவற்றின் பாதிப்பு 2 ஆண்டுகளுக்கு பின் தான் தெரியவரும். பல நோய்களை உருவாக்கும். எனவே மாணவர்கள் சுகாதாரமற்ற உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai