Enable Javscript for better performance
மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 10th June 2016 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி, ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் சீ.ராஜேஷ்குமார்(30). இவரது மனைவி திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் ராக்காண்டி மகள்  முத்துராக்கு(27). ராஜேஷ்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியிடம் பிரச்னை செய்து வந்தாராம்.

    இது குறித்து பேசுவதற்காக முத்துராக்குவின் பெற்றோர் மற்றும் தம்பி சின்னராஜ் ஆகியோர் புதன்கிழமை வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமுற்ற ராஜேஷ்குமார் தனது மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த சின்னராஜூக்கும்(26) வெட்டு விழுந்துள்ளது. காயமுற்ற இருவரும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முத்துராக்கு கொடுத்த புகாரின் பேரில் கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷ்குமாரைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai