சுடச்சுட

  

  ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த  ஜமாபந்தி யில் 29 பேர் மனுக்கள் அளித்தனர்.

  ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை துவங்கியது. முதல் நாளில் ராஜபாளையம் குறுவட்டத்தில் உள்ள வருவாய்துறை கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜம்மாள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் 181 மனுக்களை பெற்றார்.

  தொடர்ந்து வியாழக்கிழமை அயன்கொல்லங்கொண்டான் குறுவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 29 மனுக்கள் பெறப்பட்டன.

  வெள்ளிக்கிழமை இவ்வட்டத்தில் உள்ள வருவாய்துறை கணக்குகள் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். ஜூன் 15 வரை சோழா புரம், சேத்தூர் குறுவட்ட கணக்குகள் சரிபார்க்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படவுள்ளன.

  ஜமாபந்தி நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பொன்ராஜ், நலிந்தோர் நல வட்டாட்சியர் வெங்கடாசலம், வட்ட வழங்கல் அதிகாரி பாண்டி சங்கர்ராம், மண்டல துணை வட்டாட்சியர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai