சுடச்சுட

    

    வாறுகால் வசதி இல்லாததால் விருதுநகரில் முக்கிய சாலைகள் சேதம்

    By விருதுநகர்  |   Published on : 10th June 2016 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரின் முக்கியச் சாலைகளில் மழைநீர் வழிந்தோட வாறுகால் வசதி இல்லை. இதனால், சிறு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி சாலைகள் சேதமடைகின்றன.

    விருதுநகர் நகராட்சி 36 வார்டுகளில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 2007 இல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்ட பணி மேற்கு பகுதியில் நிறைவடையததால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்குகிறது. மழை நேரங்களில் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. புல்லலக்கோட்டை சாலை, பாவாலி சாலை, படேல் சாலை, ரயில்வே பீடர் சாலை, மதுரா கோட்ஸ் காலனி, கணேஷ் நகர், கே.ஆர்.கார்டன், பி1.பி1 சாலை, பி2.பி2 சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, சத்திய மூர்த்தி சாலை முதலானவை நகரின் முக்கிய சாலைகளாகும். மேலும் ஆனைக்குழாய் பகுதி வழியாக பிரதான குடிநீர் குழாய் விருதுநகருக்கு வருகிறது. இதில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாகி சாலையில் தேங்குகிறது. இதனால் இச்சாலை பழுதாகிறது. மேலும், பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வடிகால் கட்டப்படவில்லை. இதனால், சிறிது நேரம் மழை பெய்தால் கூட இச்சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கி விடுகிறது. வாகனங்கள் சென்று வரும்போது, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்படுகின்றன. இரு சக்கர மற்றும் கனரக வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    எனவே, உடனடியாக மழைநீர் வடிகால்களை அமைத்து சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai