சுடச்சுட

  

  விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.12.44 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 10th June 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் பலியானவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.12,44,500 இழப்பீடு வழங்க நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    மேட்டுமுள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (27). இவர் வனத்துறையில் வேட்டைத் தடுப்பு காவலராக வேலை செய்து வந்தார். 13.11.11-ம் தேதி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். நக்கமங்கலம் விலக்கு அருகே தனியார் நிறுவனத்தின் வேன் மோதியதில் காயமுற்ற இவர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

     இவரது தந்தை பழனிச்சாமி மற்றும் குடும்பத்தார், ரூ15 லட்சம் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.

   மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், சென்னை ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனம் வாரிசுதாரருக்கு ரூ.12,44,500 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai