சுடச்சுட

  

  ஸ்ரீவில்லிபுத்தூரில் கொத்தனார் மர்மச் சாவு

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 10th June 2016 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூர், சந்திக்கிணற்றுத் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் அர்ஜூனகுமார்(23). திருமணம் ஆகாத இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை மதியம் வீட்டை பூட்டி தூங்கியுள்ளார். மாலை கதவு திறக்கப்படாததைக் கண்டு ஜன்னல் வழியே பார்த்தபோது காதின் வழியே ரத்தம் வந்த நிலையில் அர்ஜூனகுமார் இறந்து கிடந்தார்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஜே.மகேஷ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உடலில் எந்த ரத்த காயமும் இல்லை என்றும், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், நரம்புகள் வெடித்து காதின் வழியே ரத்தம் வந்திருக்கலாம் என போலீஸார் கூறினார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் கூறியதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai