சுடச்சுட

  

  கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர் ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் சரண்

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 11th June 2016 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

  சிவகாசியைச் சேர்ந்தவர் கோபால் (30). இவர் மீது 2 கொலை வழக்குகள், 4 வழிப்பறி வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இரு வாரங்களுக்கு முன்னர் இவரது சடலம் மேட்டமலையில் உள்ள சாத்தூரப்பன் என்பவரது தோட்டத்துக் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

  இந்த வழக்கில் வெம்பக்கோட்டை போலீஸார் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 6 பேரைக் கைது செய்தனர். 5 பேரைத் தேடி வந்தனர்.

  இந்நிலையில் சிவகாசி முருகன் காலனியைச் சேர்ந்த ரத்தினம் மகன் கணேசன் (35), பள்ளபட்டி காளிமுத்து மகன் மாரிச்செல்வம் (30), கீழதாயில்பட்டி சுப்புராஜ் மகன் ஆனந்தராஜ்(28), சிவகாசி முருகன் காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் சபரிகிரீசன் (24) ஆகிய நான்கு பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்னிலையில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai