சுடச்சுட

  

  சமுசிகாபுரம் சாலையில் ஆக்கிரமிப்பால் பாதிப்பு

  By ராஜபாளையம்  |   Published on : 11th June 2016 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் சாலையில் ஆக்கிரமிப்பால் தினமும் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படுகிறது.

  ராஜபாளையத்திலிருந்து ஆலங்குளம், சாத்துôர், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு இந்த ரோட்டின் வழியாக அரசு, தனியார் பேருந்துகள் செல்கின்றன. இது தவிர சத்திரப்பட்டிக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி சென்று வருகின்றன.

  16 அடி அகலமுள்ள இந்தச் சாலை ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக சுருங்கிவிட்டது. மேலும் தெருவோரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளால் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. கடைகளுக்கு வருவோர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  முக்கிய நேரங்களில் நெரிசல் மிகவும் அதிகமாகிறது. குறிப்பாக சமுசிகாபுரம் ஊருணி பேருந்து நிறுத்தம் பிள்ளையார் கோயில் அருகில் எதிர்வரும் வாகனங்கள் விலக இடமின்றி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

  இதனால், வாகனஓட்டிகளுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துயுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai