சுடச்சுட

    

    சாத்தூர் நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    நகர்மன்றத் தலைவர் டெய்சிராணி முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஆயிர வைசிய மேல்நிலைபள்ளியில் தொடங்கிய பேரணி, பள்ளிவாசல் தெரு, மெயின்ரோடு, முக்குராந்தல், வடக்குரதவீதி வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு புகையிலை ஒழிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். அதிமுக நகர செயலாளர் வாசன், ஒன்றியச் செயலர் சண்முகக்கனி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வேலாயுதம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai