சுடச்சுட

  

  ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசன் புதுத்தெருவை சேர்ந்தவர் பொன்முருகன். ஆட்டோ ஓட்டுநர். இவர் வியாழக்கிழமை இரவு தேனியை சேர்ந்த கிருஷ்ணன், அருண் பாண்டியன் ஆகியோரை அய்யனார் கோயில் அடிவாரத்துக்கு இறக்கி விடச் சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பவில்லை.

  காலை அய்யனார் கோவிலுக்கு அரசுப் பேருந்தில் சென்றவர்கள், குடிநீர் தேக்கம் அருகே ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகிக் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல் துறையினர் வந்து பார்த்த போது, ஆட்டோ மரத்தில் மோதிய நிலையில் பின்புறத்தில் பொன்குமார் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

  ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் ரத்தம் சிந்தியதற்கான அடையாளங்கள் இல்லை. ஆட்டோ நின்ற இடத்தில் இருந்து சுமார் 25 அடி தூரத்தில் இறந்தவரின் செருப்பு, சட்டை பட்டன்கள் சிதறி கிடந்தன. மற்றொரு செருப்பு ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையின் கீழ் பகுதியில் இருந்தது.

  மேலும் செருப்பு, பட்டன்கள் சிதறி கிடந்த இடத்தில் ரத்த துளிகளும் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொன்முருகன் உறவினர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் பொன்முருகன் மரணம் விபத்தாக இருக்காது என சந்தேகம் தெரிவித்தனர்.

  சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி சங்கரேஸ்வரன் ஆய்வு செய்தார். பொன்முருக இறப்புக்கான காரணம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai