சுடச்சுட

    

    வங்கி மேலாளரின் செல்லிடப்பேசி திருட்டு: பெண் கைது

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 11th June 2016 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கி மேஜை மீது இருந்த செல்லிடப்பேசியை திருடிச் சென்ற பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    விருதுநகர், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் மனைவி இந்துரேகா(25). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர், பென்னிங்டன் மார்கெட் எதிரேயுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி தனது செல்லிடப்பேசியை மேஜை மீது வைத்துவிட்டு வங்கிக்குள் சென்றுவிட்டாராம். திரும்பி வந்து பார்த்தபோது செல்லிடப்பேசியைக் காணவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் இந்துரேகா புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து நத்தம்பட்டியைச் சேர்ந்த நல்லுசாமி மனைவி லட்சுமி (29) என்பவரைக் கைது செய்து செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai