சுடச்சுட

    

    விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே கார் மோதி விபத்து: 2 இளைஞர்கள் சாவு

    By விருதுநகர்,  |   Published on : 11th June 2016 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் கார் மோதியதில் உயிரிழந்தனர்.

    விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ரத்தினவேல்(17). அதே பகுதியைச் சேர்ந்த அன்புநாதன் மகன் சக்திவேல். இருவரும் இரு சக்கர வாகனத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சேவைச் சாலையில் வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை ரத்தினவேல் ஓட்டி வந்தார். இவர்கள் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது, ராசிபுரத்திலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரத்தினவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ரத்தினவேலும் உயிரிழந்தார். இந்த விபத்தில், இரு சக்கர வாகனம் காரின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, காரில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த விருதுநகர் தீயணைப்புவீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநர் ராசிபுரம், நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த செல்லத்துரையை(34) கைது செய்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai