சுடச்சுட

  

  சிவகாசியில் கட்டடத் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

  சிவகாசியில் உசேன் காலனியில் வசிக்கும் கட்டட மேஸ்திரி பேச்சியப்பன். தனது வீட்டை பூட்டிவிட்டு ஜூன் 6-ஆம் தேதி குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை இவரது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதைப் பார்த்த அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சோபனா, பேச்சியப்பன் மகன் தணிகைவேல்பாண்டியனுக்கு (39)தகவல் கொடுத்துள்ளார்.

  தணிகை வேல்பாண்டியன் வீட்டினுள் சென்று பார்த்தபோது, மாடிப்படியின் வழியே மர்மநபர்கள் வீட்டினுள் இறங்கி, கதவில் உள்ள பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai